"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/2/17

துபையில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி கடுமையாக்கும் பரிந்துரைகள் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன என துபை போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.

திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி,
1. மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கான லைசென்ஸ் பெற 2 விரிவுரை வகுப்புக்களுக்கு பதிலாக 8 வகுப்புக்களும், கனரக வாகன ஓட்டிகளுக்கு 8 வகுப்புக்களுக்கு பதிலாக 9 வகுப்புக்களும் கட்டாயமாகிறது.

2. சர்வதேச தரத்திற்கேற்ப, கனரக வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ் வழங்குமுன் டிரைலர் இணைக்கப்பட்ட டிரக்கை கட்டாயம் ஒட்டிக் காண்பிக்க வேண்டும் என்ற சட்டமும் கொண்டு வரப்படும்.

3. புதிதாக ஓட்டுனர் பயிற்சி பெறும் ஒட்டுனர்களுக்கு பயிற்சி வகுப்பின் போது, அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்களின் நேரடி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு விளக்க வகுப்புக்கள் நடத்தப்படும்.

4. 60 வயதை கடந்த அனைத்து ஓட்டுனருக்கும் 3 வருடத்திற்கு ஒருமுறையும், 70 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு 2 வருடத்திற்கு ஒருமுறையும் கட்டாய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அதனடிப்படையிலேயே ஓட்டுனர் லைசென்ஸ் புதுப்பிக்கப்படும் அல்லது மறுக்கப்படும்.

5. வாகனங்கள் தீப்பற்றி எரியும் நிலையில் ஓட்டுனர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், போலீஸ் துறையின் ஆப்களை பயன்படுத்தி வாகன விபத்துக்கள் குறித்து எவ்வாறு போக்குவரத்து காவல் பிரிவுக்கு தகவல் தர வேண்டும் என்பது குறித்தும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

மேலும், அமீரக தேசிய போக்குவரத்து சபையுடன் (Federal Traffic Council) கலந்தாலோசித்து அமீரகம் முழுவதும் அனைத்து வயதிற்குட்பட்ட புதிய ஓட்டுனர்களுக்கும் ஒரு வருடத்திற்கு மட்டும் தற்காலிக ஓட்டுனர் உரிமம் மட்டுமே வழங்கியும், அதே காலகட்டத்திற்குள் அதிகப்பட்சம் 12 கரும்புள்ளிகளுக்குள் பெறுபவர்களுக்கு மட்டுமே மேற்கொண்டு படிப்படியாக லைசென்ஸை நீட்டித்தும் வழங்கவும்,

மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு தற்போது ஒரே வகையின் கீழ் வழங்கப்பட்டு வரும் லைசென்ஸை 3 வகைகளின் (Categories) கீழ் பிரித்து, ஒட்டுனரின் வயது மற்றும் மோட்டார் சைக்கிளின் எஞ்சின் சக்தி ஆகியவற்றை கருத்திற்கொண்டு லைசென்ஸ் வழங்கவும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.