"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/2/17

 குவைத்தில் நடைமுறையிலுள்ள சட்டத்தின் சட்டப்பிரிவு எண்: 79ல் திருத்தங்களை மேற்கொண்டு முழுமையாக இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என குவைத் பாராளுமன்ற உறுப்பினர் முஹமது அல் ஹயேப் (Mohammad Al Hayef) கோரிக்கை விடுத்துள்ளார்.

குவைத்தில் சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டுமாயின் முதலில் குவைத் தேசிய சபை (பாராளுமன்றம்) (National Assembly) அங்கீகரித்து பரிந்துரையின் மீது குவைத் அமீர் (அரசர்) தனது இறுதி ஒப்புதலை வழங்குவார்.

ஏற்கனவே, 2012 ஆம் ஆண்டு இதே கோரிக்கை எழுப்பப்பட்டபோது அமீர் நிராகரித்திருந்தார்.குவைத் சட்ட அமைச்சர் பாலேஹ் அல்அஸப் இக்கோரிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையில், முதலில் மக்களும் பின்பு அமீரும் ஏற்றால் மட்டுமே சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

என்றாலும் அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றோ? எனும் அளவுக்கு கருதப்படும் குவைத்தில் இத்தகையஇஸ்லாமிய சட்டங்களை நடைமுறைபடுத்த வேறு சில எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் உள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.