"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/2/17

அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் மையம் (Integrated Transport Center) நடப்பிலுள்ள பார்க்கிங் விதிமீறல் அபராதக் கட்டணங்களை குறைத்து சலுகை வழங்கியும், புதிதாக 2 குற்றங்களை சேர்த்தும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

1.குடியிருப்புகளுக்கு முன் தவறாக பார்க்கிங் (Illegal parking inresidential areas) செய்யப்படும் வாகனங்களுக்கான அபராதத் தொகை 500 லிருந்து 200 திர்ஹமாக குறைக்கப்படுகிறது. மேலும் அபராதம் குறித்த அறிவிப்பு சீட்டு வழங்கப்பட்ட 4 மணிநேரத்திற்கு பின்பே வாகனம் போலீஸ் கஸ்டடிக்கு இழுத்துச் செல்லப்படும் (Towed away after 4 hours).

2.பஸ் மற்றும் டேக்ஸிகளுக்கான நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் இதர வகை வாகனங்களுக்கான அபராதம் 1,000 லிருந்து 500 திர்ஹமாக குறைக்கப்படுகிறது (Illegal parking in bus and taxi parking bays).

3.இரண்டு பார்க்கிங் பகுதிகளுக்கு குறுக்காக நிறுத்தப்படும் வாகனங்களுக்கான (Fine for occupying 2 parking spaces) அபராதம் 300 லிருந்து 200 திர்ஹமாக குறைக்கப்படுகிறது.

4.தவறான, குறிப்பிட்ட பார்க்கிங்கில் நிறுத்த அனுமதிக்கப்படாத பெர்மிட் மற்றும் பார்க்கிங் அனுமதி சீட்டை பயன்படுத்தினால் விதிக்கப்படும் (Using a parking ticket or permit not specified for that parking area ) அபராதம் 200 லிருந்து 100 திர்ஹமாக குறைக்கப்படுகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அபராதத்திற்குரிய போக்குவரத்து பார்க்கிங் குற்றங்கள்:

1.போலியான பார்க்கிங் பெர்மிட்டுகள் மற்றும் பார்க்கிங் டிக்கெட்டுகளை  (usingfake permits or tickets) பயன்படுத்தினால் 10,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

2.தங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்களை கட்டாமல் தவிர்ப்போருக்கு (for those who avoid payment of their previous fines) 1,000 திர்ஹம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

3. மேலும் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனமும் போலீஸரால் இழுத்துச் செல்லப்படும்.(Cars will still be towed if parked in spaces for more than three days)

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.