"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/2/17

 பெரம்பலூரில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டியில் வி.களத்தூர் அணிகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை தட்டிச்சென்றது.

பெரம்பலூரில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு எஸ் பி சோனல் சந்திரா பரிசளித்தார். பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக போலீஸ் பொது மக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

போட்டிகளை பெரம்பலூர் எஸ்பி சோனல் சந்திரா தொடங்கி வைத்தார். தீண்டாமை ஒழிப் புப் பிரிவு டிஎஸ்பி தங்கவேல் முன்னிலை வகித்தார். பின்னர் நடந்த கபடிப் போட்டியில் ரோவர் அணி, போலீஸ் அணி, வி.களத்தூர் அணி, மில்லத் நகர் அணி ஆகிய 4 அணிகள் மோதின.

இதில் ரோவர் அணியும், மில்லத்நகர் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் ரோவர் அணி முதலிடம் பெற் றது.

இதே போல் வாலிபால் போட்டியில் பெரம்பலூர் 4ரோடு மாஸ் அணி, வி.களத்தூர் அணி, போலீஸ் அணி உள்ளிட்ட அணிகள் மோதின.

இதில் மாஸ் அணியும், வி.களத்தூர் அணியும் இறுதிப் போட்டிக்குத்தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் வி.களத்தூர் அணி முதலிடம் பெற்றது.

வினா டி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் சேரன், சப்.இன்ஸ்பெக்டர் கள் (தனிப் பிரிவு) சத்யா, (டிராபிக்) பத்மநாபன், (ஓய்வு) கணேசன் ஆகியோர் நடத்தினர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற அணி யினருக்கும், தனி நபர்களுக்கும் பரிசுகளையும், சான்றிதழ்களையும் எஸ்பி சோனல் சந்திரா பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

வெற்றிப்பெற்ற அனைத்து வீரர்களுக்கு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்...
0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.