"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/2/17


நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மக்களின் கருத்தைக் கேட்க தனது அலுவலகத்தில் கருத்துப் பெட்டி ஒன்றை வைத்துள்ளார். முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களை எழுதி பெட்டியில் போடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் நிலவரம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. அடுத்து யார் ஆதரவளிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பில் ஓபிஎஸ் அணியும், அடுத்து யார் ஓட்டம்பிடிப்பார் என்ற பீதியால் சசிகலா அணியும் உள்ளன.

முதல்வர் ஓபிஎஸ்க்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களும் சசிகலா மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக ஓபிஎஸ்க்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் எப்போது யார், ஓபிஎஸ் பக்கம் மாறிவிடுவார்களோ என்ற பயத்திலே உள்ளது சசிகலா தரப்பு. இந்நிலையில் நாகை தொகுதி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தனது அலுவலகத்தில் கருத்து கேட்பு பேட்டி வைத்துள்ளார்.

முதலமைச்சர் யார் என தேர்நதெடுக்க மக்களின் கருத்துகளை அறிய கருத்து கேட்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அதிமுக ஆதரவு எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.