"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/2/17


சவுதியைச் சேர்ந்த அரேபியர் அயாதா குதைர் அல் ரம்மாலி (Ayada Khodeir Al Rammali). இவரிடம் இந்தியாவைச் சேர்ந்த யாஸீன், அனீஸா தம்பதியர் பணிபுரிந்து வருகின்றனர்.

இத்தம்பதியின் மகன் அலி என்பவர் அமீரகம், அபுதாபியில் பணிபுரிந்து வந்தார். அலி அபுதாபியில் பணிபுரிந்து வந்த நிலையில் அவருடன் பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டவருடன் கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 2 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் மகனை குறித்த எந்தத் தகவலையும் பெற முடியாமல் பெற்றோர் கலங்கினர்.

இறுதியாக, தங்களுக்கு உதவும்படி தங்களின் முதலாளி அயாதா குதைர் அல் ரம்மாலியிடம் வேண்டினர்.தங்கள் ஊழியர்களின் துயர் தீர்ப்பதற்காக நாடு விட்டு நாடு பறந்து வந்து அபுதாபியின் பல போலீஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் அலியை தேடினார் அயாதா.

இறுதியில் அபுதாபியிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள விசாரணை கைதிகளுக்கான மையத்தில் அலி கண்டுபிடிக்கப்பட்டு அவருக்குத் தேவையான சட்ட உதவிகளை செய்தநிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட பாகிஸ்தானி நபரும் தனது வழக்கை வாபஸ் வாங்கி உதவியதை தொடர்ந்து அலி சிறையிலிருந்து விடுதலையானார்.

அலியை சிறைமீட்க தனக்கு உதவிய அமீரக அதிகாரிகள் மற்றும் சிறை துறையினருக்கும் அயாதா குதைர் அல் ரம்மாலி அவர்கள்தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.