"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
14/2/17

சவுதி அரேபியா, அல் கஸீம் பிரதேசத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் அல் அப்ரி (Abdulrahman al-Abri ), இவர் பழமையான வாகனங்களை சேகரிக்கும் வழக்கமுள்ளவர். இவரிடம் 100க்கு மேற்பட்ட பழமையான வாகனங்கள் உள்ளன.

இவற்றில் பல 1946 ஆம் ஆண்டுக்கு முன் புழக்கத்தில் இருந்தவை என்பதுடன் இந்த பழைய வாகனங்களில் 50 சதவிகிதம் பழுது நீக்கப்பட்டு இன்னும் இயங்கும் நிலையில் உள்ளன. மற்றவைகளுக்கு அதன் உதிரி பாகங்கள் கிடைக்காததால் அப்படியே உள்ளன.

2006 ஆம் ஆண்டு இன்றைய சவுதி மன்னர் சல்மான் அவர்கள் ரியாத் மாகாண கவர்னராக இருந்த பொழுது அப்துல் ரஹ்மான் அல் அப்ரியின் பழமையான கார்களின் அருங்காட்சி மையத்தை பார்வையிட்ட போது இந்தப் படத்திலுள்ள 'டிரக்' வாகனத்தின் பெயர் 'டாஸ்மன்' (Dasman) என்றும் இதை பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளில் குதிரைகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்துவோம் என்ற அரிய தகவலையும் பசுமையான பழைய நினைவுகளையும் அல் அப்ரியிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அல் அப்ரி சுமார் 22 வருடங்களுக்கு முன் இந்த பழமையான டாஸ்மன் டிரக் வாகனத்தை வாங்கியிருந்தார். இந்த டிரக்கை மீண்டும் இயங்க வைப்பதற்கு தேவையான உதிரி பாகங்களை அமெரிக்காவில் ஆர்டர் செய்து மீண்டும் இயங்க வைத்து மன்னருக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

தற்போது மன்னரின் அல் அஜ்வா அரண்மனைக்கு அல் அப்ரி சென்றபோது, மன்னர் சல்மான் அவர்கள் இளமையில் நேசித்த அந்த பழமையான டிரக் அரண்மனை முன்பு பழம்பெருமையை போற்றும் வகையில் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டு மிகவும் பூரித்துப்போய் இச்செய்தியை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் அப்துல்ரஹ்மான் அல்அப்ரி.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.