"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
1/2/17

நேற்று நாடாளுமன்றத்தில் திடீரென மயங்கி விழுந்த கேரள எம்.பி ஈ.அகமது, இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட கேரள மாநில எம்.பி இ.அகமது ,குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது திடீரென நேற்று மயங்கி விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருந்ததால், நேற்று மதியம் 2.15 மணி அளவில் ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.15 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அகமது உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் பதப்படுத்துவதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இன்று கேரளாவில் உள்ள அகமதுவின் சொந்த ஊருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த அகமது,கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்,வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.