"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/2/17

துபாய்  - சவுதி அரேபிய இளவரசரின் 80 செல்ல பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன.
80 பருந்துகள்
சவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன. பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பயணிகள் விமானத்தில் ஆட்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். பறவைகள், விலங்குகள் பயணம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் சவுதி அரேபியா இளவரசர் ஒருவரின் 80 பருந்துகள் விமானத்தில் ஆட்களுடன் பயணம் செய்தன.

தேசிய பறவை
பருந்து ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய பறவையாக உள்ளது. எனவே அது அங்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.அதன் மூலம் அவை பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, பாகிஸ்தான், மொராக்கோ மற்றும் சிரியாவுக்கு விமானத்தில் பயணம் செய்ய முடியும்.

பரவும் வீடியோ
அந்த வகையில் சவுதி அரேபியா இளவரசரின் 80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்தன. அவற்றின் கண்கள் கட்டப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி அவை இருக்கைகளின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்தன. பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் பிரசுரமாகி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை தனது விமானி நண்பர் வழங்கியதாக அதை வெளியிட்டவர் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.