"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
14/2/17


அமீரகத்தை சேர்ந்த ஒருவரின் மகன்கள் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்டதற்காக 3 மாதங்களுக்கு அவரது லைசென்ஸ் முடக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த போக்குவரத்து குற்றங்கள் அனைத்தும் அந்த இமராத்திக்கு சொந்தமான 3 கார்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகும்.

துபை போக்குவரத்து துறைக்கு வந்த தந்தை அந்தக் குற்றங்கள் அனைத்தும் தனது மகன்களால் ஏற்படுத்தப்பட்டது என்றும் எனவே, தன்னுடைய டிரைவிங் லைசென்ஸ் முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அவருடைய மகனை அழைத்து வருமாறும், அவர்கள் குற்றமிழைத்ததை ஒப்புக்கொண்டால் டிரைவிங் லைசென்ஸ் முடக்கத்திற்கு காரணமான கரும்புள்ளிகளை அவர்களுடைய டிரைவிங் லைசென்ஸ் மீது மாற்றித் தருவதாக கூறியதையடுத்து மகன்களை காட்டிக்கொடுக்க விரும்பாத தந்தை தண்டனையை அவரே ஏற்றுக்கொண்டார்.

36 கரும்புள்ளிகளை பெறும் வாகன ஓட்டிகளுடைய லைசென்ஸ் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக 36 கரும்புள்ளிகள்பெறுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு முடக்கபடுவதுடன் 520 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும், இரண்டாவது முறையாக 36 கரும்புள்ளிகள் பெறுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் 6 மாதங்களுக்கு முடக்கப்படுவதுடன் 720 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும், மூன்றாம் முறையாகவும் 36 கரும்புள்ளிகள் பெறுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் 1 வருடத்திற்கு முடக்கப்படுவதுடன் 1,020 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.