"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/2/17

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 24 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார். 
 
பன்றிக் காய்ச்சலால் புதுச்சேரியில் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன் (30), பன்னித்திட்டு பகுதியைச் சேர்ந்த பானுமதி (50), பெரிய காலாப்பட்டு முருகன் (30) ஆகியோர் இறந்துள்ளனர். மேலும், பலர் காய்ச்சல், சளித் தொல்லை காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக் காய்ச்சலுக்கு சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.    

பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி, அத்துறை இயக்குநர் ராமன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:                
பன்றிக் காய்ச்சலால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அனைத்துப் பகுதிகளிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டு 24 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், இரண்டு பேர் மருத்துவர்கள், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர.         
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கும் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இதற்குத் தேவையான டாமிபுளு மாத்திரைகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு வந்து தொடர் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். காய்ச்சல் தீவிரமாக இருந்தால் மருத்துவர்களின் அறிவுரைப்படி பன்றிக் காய்ச்சல் சோதனை செய்து கொள்ள வேண்டும் ” என்றார் மல்லாடி கிருஷ்ணராவ்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.