"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
21/2/17

பர்ன்  - ஜெர்மனி நாஜி சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போர் காலக்கட்டங்களில் பயன்படுத்திய டெலிபோன் 2,43,000 டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் அமெரிக்காவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ‘கொலைகார தொலைபேசி’-யை அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்தவரின் பெயர் சில காரணங்களினால் வெளியிடப்படவில்லை. இந்தப் போனில் நாஜி தலைவரின் பெயரும் ஸ்வஸ்திக் குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் போனை சோவியத் ராணுவ வீர்ர்கள் பிரிட்டன் அதிகாரி சர் ரால்ஃப் ரேய்னரிடம் அளித்துள்ளனர். சர் ரேய்னர் ஹிட்லர் கடைசி காலங்களில் பதுங்கியிருந்த பதுங்கு குழியிலிருந்து இந்தப் போனை எடுத்துள்ளார்.

இதனை ரேய்னரின் இறப்புக்குப் பிறகு அவரது மகன் ரேனல்ஃப் ரேய்னர் பாதுகாத்து வந்தார். முதலில் இது கறுப்பு வண்ணத்தில் தான்  இருந்தது, பிற்பாடு இது சிகப்பு கலராக்கப்பட்டது மாற்றப்பட்டது. இதே ஏலத்தில் ஹிட்லர் வளர்த்ததாகக் கருதப்பட்ட அல்சேஷன் நாயின் பீங்கான் வார்ப்புருவத்தை வேறு ஒருவர் 24,300 டாலர்களுக்கு வாங்கினார்.ஹிட்லர் பயன்படுத்திய இந்த டெலிபோன் ‘அனைத்து கால மிக பயங்கரமான ஆயுதம்’ என்று வர்ணிக்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.