"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
23/2/17

 சவுதி சிவில் விமானத்துறையின் (The General Authority of Civil Aviation- GACA) அறிவித்தலின்படி, எதிர்வரும் 2017 ஆம் ஆண்டிற்கான முதல் ஹஜ் யாத்ரீகர்களை சுமந்து வரும் விமானம் துல்காயிதா 1 (ஜூலை 24) அன்று ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் என்றும் ஹஜ்ஜூக்குப் பிந்தைய கடைசி விமானம் துல்ஹஜ் 4 (ஆகஸ்ட் 26) அன்று ஜித்தா விமான நிலையத்திலிருந்து புறப்படும்.

2013 ஆம் ஆண்டு சர்வதேச ஹஜ் யாத்ரீகர்களின் 20 சதவிகித கோட்டா குறைக்கப்பட்டிருந்தது எதிர்வரும் ஹஜ் சீசனுக்கு விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து சுமார் 260,000 கூடுதல் ஹஜ் யாத்ரீகர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 2.5 மில்லியன் யாத்ரீகர்கள் வருகை என்ற நிலை படிப்படியாக உயர்த்தப்பட்டு எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 4 மில்லியன் யாத்ரீகர்கள் என்ற எண்ணிக்கை அளவை எட்டும்.

கடந்த வருட ஹஜ் யாத்திரையை சுமார் 1,862,909 பேர் நிறைவேற்றியுள்ளனர், அதில் 169 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு யாத்ரீகர்கள் 1,325,372 பேர் எனவும் (சவுதி) உள்நாட்டு யாத்ரீகர்கள் 537,537 எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருட ஹஜ் யாத்ரீகர்களின் போக்குவரத்திற்காக மொத்தம் 58 சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதன் மூலம் மொத்தம் 1,246,660 வெளிநாட்டு யாத்ரீகர்கள் பயனடைந்தனர் என்றும், இவர்களில் 694,171  பேர் ஜித்தா விமான நிலையத்திலும், 551,170 பேர் மதீனா விமான நிலையத்திலும் தரையிறங்கினர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.