"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
21/2/17

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடக்க இருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை முறையாக பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாக’ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டார்.மேலும், புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த வாரம் ஐகோர்ட்டு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு இல்லையா? ஏன் இந்த வழக்கை இழுத்தடிக்கிறீர்கள்?’ என்று தேர்தல் ஆணையத்தின் வக்கீலிடம் சரமாரியாக கேள்வி கேட்டு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்த போகிறீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்’ என்றனர். அதற்கு மூத்த வக்கீல், ‘தேர்தல் பணி தொடர்பான பயிற்சிகளை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியதுள்ளது. அதனால், தேர்தல் வருகிற மே 15-ந் தேதிக்குள் நடத்தப்படும்’ என்றார்.

‘ஏன் இவ்வளவு காலதாமதம் செய்கிறீர்கள்? மே 15-ந் தேதிக்குள் என்று கூறுவதை எங்களால் ஏற்கமுடியாது. தேர்தல் இந்த தேதியில் நடத்தப்படும் என்று தெளிவான பதிலை தெரிவிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறினார்கள். பின்னர், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை வரும், மே 14 ஆம் தேதிக்குள்  நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.