"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/2/17

ரஷியாவின் பிரபல மாடல் அழகி ஏஞ்சலினா நிக்கோலு. 23 வயதான இவர் ரஷியா மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கு விளம்பர மாடல் அழகியாக உள்ளார். துபாய் வந்த அவர் இங்குள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்றான கயான் கட்டிடத்தின் உச்சிக்கு தன் ஆண் நண்பருடன் சென்றார்.

1,004 அடி உயர அந்த கட்டிடத்தின் உச்சியின் விளிம்பில் உயிரை பணயம் வைத்து ஆண் நண்பரின் கையை பிடித்துக்கொண்டு கீழே தொங்கியபடி படம் எடுத்துக்கொண்டார். அப்போது, பாதுகாப்புக்காக எந்த சிறப்பு ஏற்பாடுகளோ அல்லது இந்த படங்களை எடுத்துக்கொள்ள அனுமதியோ பெறவில்லை.

தனது துணிச்சலை உலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
இந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. மாடல் அழகியின் அபாய துணிச்சல் காட்சியை பார்த்து பலர் வியந்து பாராட்டும் நேரத்தில் கடும் கண்டனங்களும் வெளியாகி உள்ளன. ரஷிய மாடல் அழகியின் இந்த ஆபத்தான புகைப்பட காட்சியை பார்த்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த காட்சியை பார்த்த பலர், சமூக வலைத்தளங்களில் “இவர் இளைஞர்களுக்கு ஒரு கெட்ட உதாரணமாக உள்ளார். கடவுள் உங்களுக்கு அழகை கொடுத்த அளவுக்கு அறிவை கொடுக்கவில்லை” என கடுமையாக சாடியுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.