"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/1/17

சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தவறிழைக்கும் ஓட்டுனர்களை
கண்காணிக்கும் வகையிலும் மேலும் பல ரேடார் கேமிராக்கள் மற்றும் போலீஸ் ரோந்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில் அதிக விபத்துக்கள்
நடைபெறும் முதல் 10 ஆபத்தான சாலைகளில் (Emirates top 10 dangerous road) ஒன்றான அபுதாபி – அல் சிலா (சவுதி செல்லும்) நெடுஞ்சாலையிலும், அபுதாபி – அல் அய்ன் சாலையிலும் நிரந்தர ரேடார் கேமராக்களும், ஓட்டுனர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் அதிக ரோந்து போலீஸ் வாகனங்களையும் ஈடுபடுத்தப்பட உள்ளன.

நிரந்தர ரேடார் கேமிராக்கள்
எங்கெங்கு நிறுவப்பட்டுள்ளன என்பதை ‘adpolicehq’ என்ற தளத்திலும், சமூக வலைதளங்களிலும் எந்நேரமும் ஓட்டுனர்கள் தெரிந்துகொள்ளலாம்.

அபுதாபி – அல் சிலா நெடுஞ்சாலையில் செல்வதற்கான வேகக்கட்டுப்பாட்டு பகுதிகள்
மூன்றாக ( 3 stretches) பிரிக்கப்பட்டுள்ளன.

முதல் பகுதி: 1st stretch அல் தப்ரா மேம்பாலத்திலிருந்து (Al Dhafra Bridge) பைனூனா காடுகள் (Baynunah Forest) வரை 100 km/h, 121 km/h எனும் கருணை வேகக்
கட்டுப்பாட்டை (Grace Speed Limit) தொட்டது முதல் கேமரா பதிவு செய்யும்.

இரண்டாம் பகுதி: 2nd stretch
பைனூனா காடுகள் முதல் பரக்கா வரை 120 km/h வேகத்தில் செல்லலாம், 141 km/h எனும் கருணை வேகக் கட்டுப்பாட்டை
தொட்டது முதல் கேமரா பதிவு செய்யும்.

மூன்றாம்
பகுதி: 3rd Stretch பரக்கா (Barakah) முதல் அல் குவைபத் (Al Guwaifat) வரை 100 km/h, 121 km/h
எனும் கருணை வேகக் கட்டுப்பாட்டை தொட்டது முதல்
கேமரா பதிவு செய்யும்.

அனைத்து பகுதிகளிலும் கனரக வாகனங்கள் (Heavy Truck) 80 km/h என்ற வேகத்திலேயே செல்ல
வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பயணிகள் பேருந்துகள் (Passenger Buses) 100 km/h என்ற வேகத்திலேயே செல்ல
வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.