"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
25/1/17

தோழர். நேற்று துவங்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த வார்த்தை. 'தோழர் எனச்சொல்லி உங்களிடம் யாராவது பேசினால் அவர்களின் தொடர்பை துண்டியுங்கள்' என போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னது தான் இந்த வார்த்தை வைரலாக காரணம். சைலேந்திரபாபு இவ்வாறு பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் சைலேந்திரபாபு இதை சொல்லவில்லை. இதைச் சொன்னவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, கோவை வஉசி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 7-வது நாளான கடந்த 23-ம் தேதி அதிகாலை போராடிய மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வெளியேறாதவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர். அன்றைய தினம் முழுக்க கோவையின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தடியடி நடத்தப்பட்ட மறுதினம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார் கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ். "மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சில அமைப்பினர் இணைந்து கொண்டனர். அவர்கள் யார் யார் என்ற விவரம் இருக்கிறது" எனச்சொன்னவர், பேப்பரில் எழுதியிருந்த அமைப்பின் பெயர்களை படிக்க ஆரம்பித்தார்.  "மக்கள் அதிகார மையம், நாம் தமிழர், மே 17 இயக்கம், ஆர்.எஸ்.ஒய்.எப், எஸ்எப்ஐ, டிஒய்எப்ஐ, சிபிஐ (எம்எல்) போன்ற மதவாத, இனவாத அமைப்புகள் தான் மாணவர்களோடு இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தின் போது மாணவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்கள் உங்களை (மாணவர்களை) அழைக்க கூடும். தோழர் என அழைத்து உங்களிடம் பேசினால் தொடர்பை துண்டியுங்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவர், தடையை மீறி அரசே நடத்திய ரேக்ளா ரேஸ், போலீஸார் நடத்திய தாக்குதல் குறித்த செய்தியாளர்கள் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். அப்போது அவருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. அழைப்பை பார்த்தவர், திடீரென இது லைவ்வாக (நேரடி ஒளிபரப்பு) ஒளிபரப்பாகி வருகிறதா என கேட்டார். ஆம் என்றதும் வேகமாக வெளியேறினார்.
- ச.ஜெ.ரவி,

http://www.vikatan.com/news/tamilnadu/78727-if-someone-calls-by-saying-thozhar-cut-their-contact---he-is-the-one-who-said-that.art

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.