"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/1/17அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இறுதிப் பேருரையை சிகாகோவில் ஆற்றினார். அங்கு தான் அவரது அரசியல் பயணம் தொடங்கியது.

கடந்த 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒபாமா வெற்றிபெற்றதாக சிகாகோவில் தான் அறிவிக்கப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் வசித்து வந்த ஒபாமாவின் குடும்பம் அந்த மாளிகையை காலி செய்து விட்டு சிகாகோ புறப்பட்டனர்.

அதிபராக தனது கடைசி உரையை சிகாகோவின் மெக்கார்மிக் திடலில் அவர் ஆற்றினார்.

அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அவரது உரையை கண்ணீருடனும், சோகத்துடனும் செவி மடுத்தனர்.

முந்தைய ஆட்சியாளர்களின் போர்வெறியால், அமெரிக்க ராணுவ வீரர்களின் சவப்பெட்டிகள் அந்நாட்டு விமான நிலையங்களுக்கு தொடர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில், தனது 8 ஆண்டு கால ஆட்சியில் எந்த நாட்டின் மீதும் போரை அறிவிக்காத அதிபராக அவர் இருந்தது தான் அமெரிக்கர்கள் அவரை மனிதநேயராக பார்க்க காரணமாக இருந்தது.

அவரது இறுதி பேருரையின் ரத்தின சுருக்கம். ” நான் எனது இருபதுகளில் (வயது) முதல்முறையாக சிகாகோ வந்தேன். இப்போது வரை என்னை நானே தேடிக் கொண்டிருக்கிறேன்.

எனது வாழ்வின் நோக்கம் என்ன என்பதை இப்போது வரை தேடிக் கொண்டிருக்கிறேன். பாமர மக்கள் மாற்றத்தை நோக்கிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே இங்கு மாற்றம் என்பது சாத்தியம்.

இது தான் நான் இங்கு கற்றுக் கொண்டது. அவர்கள் அதில் முழுவதுமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் அதனை அடைய வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.