"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
9/1/17

சிரியாவின் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் பாலியல் அடிமையாக சிறைவைக்கப்பட்டிருந்தப் பெண் குறித்த பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் காயமுற்றவாறு மீண்டுள்ளார்.

லுமியா ஆஜி பஜார் என்ற குறித்த இளம் வயது பெண் வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு தான் பெற்ற ஐ.எஸ் அமைப்பின் அனுபவமாக பகிர்ந்துள்ளதாவது, ‘தானும் தன்னைப்போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் அடிமைக்காக விற்கபட்டுள்ளோம்.

தன்னை ஒரு வயதான ஐ.எஸ் தலைவரின் பாலியல் அடிமையாக விற்றனர். குறித்த கொடூரன் தனது(லுமியா) மதத்திற்கு விரோதமான ஆடைகளை அணியச்செய்ததோடு, வெறிபிடித்த படைகளுக்கு தன்னை பாலியல் விருந்தாக்கி, பல்வேறு கொடுமைகளை செய்தனர்.

நான் தொடர்ச்சியாக தப்பிக்க முயற்சித்து அவர்களிடம் பிடிபட்டு வந்தேன். இந்நிலையில் என்னை மொசூல் நகரத்திலுள்ள தீவிரவாதிகள் முன் நிறுத்தி இனி நான் தப்பிக்க முயற்சித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவதாய் எச்சரிக்கப்பட்டேன்.

ஆயினும் நான் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டாலோ, எனக்கான உணவை நிறுத்தி துன்புறுத்தினாலோ அல்லது ஒரு காலை வெட்டி என்னை தண்டித்தாலோ நான் தப்பிக்கும் எனது முயற்சியை விடமாட்டேன் என சபதம் எடுத்தேன்!

எனது சபதத்திற்கு பரிகாரமாக என்னை வேறோரு தீவிரவாத தலைவனுக்கு விற்றார்கள். அங்கும் அதே கொடுமைகளைதான் அனுபவித்தேன். இருப்பினும் அவர்கள் செய்த கொடுமைகள்தான், அங்கிருந்து நான் உயிருடன் மீண்டு, மீண்டும் வாழவேண்டும் எனும் உணர்வை என்னிடத்தில் ஏற்படுத்தியது’. எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலால் சீர்குழைந்துள்ள முகத்தோடு தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் லுமியா. இந்நிலையில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் லுமியா மற்றும் அவரைப்போல் ஐ.எஸ் அமைப்பிடமிருந்து மீண்ட மற்றொரு பெண்ணிற்குமாக, சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் பரிசினை வழங்கி கௌரவித்துள்ளது.

பரிசினை பெற்றப் பெண்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இன்னும் பாலியல் அடிமைகளாக சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் படி கேட்டு கொண்டனர். அத்தோடு தங்களுக்கு ஏற்பட்ட நிலைமைகள் உலகில் எப்பாகத்திலும் ஏற்படாதிருக்க சர்வதேச சமூகங்களின் செயற்பாடு அவசியம் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.