"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/1/17

சசிகலாவின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவால், சசிகலா உறவினர்களை பீதியடைய செய்துள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் உயர்மட்ட நிர்வாகிகள், பகீரத பிரயத்தனம் செய்து, சசிகலாவை பொதுச் செயலராக அமரச் செய்துவிட்டனர்.

சசிகலாவை ஏற்காத, அதிருப்தியாளர்கள், சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்படும், 'பிளக்ஸ்' பேனர்கள் மீது, சாணம் வீசி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர். மேலும், இதற்கு மாற்றாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு, ஆதரவுகள் தமிழகம் முழுவதும் தற்போது வலுவாக எழுந்துள்ளது.தீபாவிற்கு ஆதரவாக, பேரவைகளை துவக்கியுள்ள, அ.தி.மு.க., அதிருப்தியாளர்கள்.

தீபாவை தமிழக முதல்வராக்க சபதம் எடுத்து செயல்பட துவங்கிஉள்ளனர்.இந்நிலையில், சசிகலா அவரது கணவன் நடராஜன் மற்றும் சசிகலாவின் ஒட்டுமொத்த உறவினர்களும் உள்ள சொந்த மண்ணான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்கு ஆதரவுகள் பெருக துவங்கி விட்டன.
தீபா பேரவைக்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு விட்ட நிலையில், தீபா பேரவை சார்பாக, போஸ்டர், பிளக்ஸ் வைப்பது, கூட்டங்களை கூட்டி, புதிய நிர்வாகிகள் சேர்ப்பு என, துவங்கி விட்டனர். சசிகலா உறவினர்கள், சாதிகளின் அடிப்படையில் கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகளை வளைத்து, அவர்களை மிரட்டியும் தாங்களின் செல்வாக்கை தஞ்சாவூரின் சுற்றுவட்டாரங்களில் பெருக்கி வருகின்றனர்.

இதற்கு மாற்றாக, சசிகலாவின் சொல்வாக்கை குறைக்கும் வகையில், தீபா பேரவை வலு பெற்று வருவதால், மன்னார்குடியினர் மத்தியில், பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.