"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
8/1/17

சென்னை: பெட்ரோல் பங்க்குகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளன. பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் இந்த திடீர் அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடியின் ரூபாய் மதிப்பு ரத்து நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் பெரும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் பல மணி நேரம் காத்துக் கிடந்த பணம் எடுக்க வேண்டியுள்ளது. ஏடிஎம் மையங்கள் பெரும்பாலும் செத்துக் கிடக்கின்றன.

இதனால் மக்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள். இப்படி நாலா பக்கமும் மக்களை நெருக்கடிகளும், கஷ்டங்களும் சுற்றி வளைத்துள்ள நிலையில் தலையில் ஒரு இடியை இறக்கியுள்ளது தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம்.

இன்று நள்ளிரவு முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர். வங்கிகள் கார்டு பணப்பரிமாற்றத்துக்கு 1% வரி விதிப்பதாக அறிவித்துள்ளன. பல வங்கிகள் இதை அறிவித்து தவிட்டன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் முகவர்களுக்கு இழப்பு ஏற்படும்.

கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதால் வங்கிகளில் இருந்து பணம் தாமதமாக கிடைக்கிறது. எனவே கார்டுகளை வாங்குவதை நிறுத்தும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளன.

இந்த அறிவிப்பு மக்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது மிகப் பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு உடனடியாக தலையிடகோரிக்கைகள் எழுந்துள்ளன.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.