"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
9/1/17

நேற்று மஸ்கட்டிலிருந்து துபை
புறப்படவிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் கார்கோ ஏற்றும் பகுதியில் பாம்பு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

எனினும், கார்கோ பகுதியில் பாம்பு
கண்டுபிடிக்கப்பட்டபோது
விமானத்தில் பயணிகள் யாரும்
ஏற்றப்பட்டிருக்கவில்லை. பாம்பு
விமானத்திலிருந்து அகற்றப்பட்டப்பின் இன்று திங்கள் முதல் விமானம் மீண்டும்
சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று பாம்பு புகுந்த சம்பவத்தை, 2006 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஸ்நேகஸ் ஆன் எ பிளேன்' என்ற ஆங்கிலப் படத்துடன் ஒப்பிட்டு, அப்படத்தின்
கதாநாயகன் சாமுவேல் எல் ஜான்சன் இல்லாத நிலையில் பாம்பு மட்டும் விமானத்தில் இருந்ததாக சமூக வலைத்தளவாசிகள் ஹாஸ்யமாக
பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் டொர்ரியான் நகரிலிருந்து மெக்ஸிகன் சிட்டிக்குப் பறந்த மெக்ஸிகன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுமார் 1 மீட்டர் நீள பாம்பு ஒன்று கண்டுபிடித்து அகற்றப்பட்ட சம்பவமே இதற்கு முன் விமானத்திற்குள் பாம்பு புகுந்த சம்பவமாகும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.