"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/1/17

பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் கோடாக் மகேந்திரா வங்கியும் இணைந்து 250,000 ஏர்டெல் பேமெண்ட் வங்கி சேவை மையங்களை அமைக்க உள்ளன. இதன் முதல் கட்டமாக 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பேமெண்ட் வங்கிகள் பிற வங்கிகளுடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானவை. பேமெண்ட் வங்கிகளில் சேமிப்புக் கணக்குகள் மட்டுமே துவங்க முடியும். அதுமட்டும் இல்லாமல் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பு வைக்க முடியும்.

அதிக வட்டி:ஏர்டெல் பேமெண்ட் வங்கிகளில் பணத்தை டெப்பாசிட் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை.ஆனால், 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை பணத்தை எடுக்க 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.இதுவே 4000 ரூபாய்க்கும் அதிகமாகப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் 0.65 சதவீதம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

அதாவது 1000 ரூபாய் எடுக்க 65 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகளுக்கு இடையில் பணத்தைப் பரிமாற்ற கட்டணம் ஏதும் இல்லை. ஆனால், பிற வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப வேண்டும் என்றால் 0.5 சதவீதம் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில் வங்கி சேவை மையங்களில் இருந்து பிற வங்கி கணக்கிற்குப் பணத்தை அனுப்ப வேண்டும் என்றால் 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கை திறக்க 100 ரூபாய் கட்டணமும், வங்கி கணக்கை மூட 50 ரூபாய் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் 49,990 ரூபாய் வரை ஒரே நேரத்தில் டெப்பாசிட் செய்யலாம்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.