"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
7/1/17


தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி இன்று நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் சோரிஸ்புரத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி மாரீஸ்வரி பங்கேற்றார்.

போட்டியின் முதல் சுற்றின் முடிவில் மயக்கமடைந்த அந்த மாணவி, திடீரென மைதானத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடல், பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

உயிரிழந்த மாணவி கடந்த ஒரு வாரமாகத்தான் குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்டு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாணவி பங்கேற்கும் முதல் போட்டி என்பதால் அவருடன் அவரது தாயாரும் வந்துள்ளார்.

மாணவி மயக்கமடைந்த பின் அவரது தாயாருடன் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

போட்டி நடைபெறும் மைதானத்தில் முதலுதவி வசதி சரிவர செய்யப்படவில்லை என்றும் மைதானத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.