"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
30/1/17

மெரினா_போராட்டத்தில்_ஒஸாமா_படத்தை_யாரும்_காட்டவில்லை

மாணவர்_போராட்டத்தை_தைப்புரட்சி_என்றும்_தமிழர்களின்_வசந்த_காலம்_என்றும்_வாழ்த்து!

சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் 
M. தமிமுன் அன்சாரி MLA அதிரடி விளக்கம் !

இன்று சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA தமிழக முதல்வரின் கவனத்திற்கு சில விளக்கங்களை கொடுத்தார்.

மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் ஒஸாமா பின் லேடன் படத்தை காட்டியதாக கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் OPS அவர்கள் சட்டமன்றத்தில் பேசினார்.

இன்று (30/1/2017) சட்டமன்றத்தில் அது குறித்து பேசிய மஜக பொதுச் செயலாளர் 
M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஒஸாமா 
பின்லேடன் படத்தை மெரினா மாணவர் போராட்ட களத்தில் யாரும் காட்டவில்லை. சென்னையில் ஒரு சாலையில் சென்ற பைக்கில் அந்த படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப்படத்தைத் தான் அதிகாரிகள் முதல்வரிடம் கொடுத்திருக்கின்றார்கள் என்றார். மாணவர் போராட்டதிற்க்கும் அந்த படத்திற்க்கும் சம்பந்தமில்லை என்று விளக்கி அவையை பரபரப்பில் ஆழ்த்தினார்.

உடனே முதல்வர் திரு OPS அவர்கள் எழுந்து அதுகுறித்து விசாரிக்க சொல்லியிருப்பதாகவும், விசாரனை அறிக்கையில் அது தெரிய வரும் என்றும், தான் எந்த சமூகத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் பதிலளித்தார். 

சபை முடிந்ததும் முதல்வரிடமும், அமைச்சர்களிடமும் இதுகுறித்து கூடுதல் விபரங்களை மஜக பொதுச் செயலாளர் 
M.தமிமுன் அன்சாரி MLA. எடுத்துக் கூறினார். 

இந்த விசயத்தை உரிய வகையில் தெளிவுப் படுத்தியது நல்ல விசயம் என்றும் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டினர்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் K.R. ராமசாமி MLA அவர்கள் கைக்கொடுத்து பாராட்டினார்.

ஒரு சர்ச்சையான விஷயம் இதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டதாக பத்திரிக்கையாளர்களும் பாராட்டினர். 

முன்னதாக தனது உரையில் மாணவர்கள் போராட்டத்தை தைப்புரட்சி என்றும், இப்போராட்டம் நடந்த காலத்தில் வாழ்வதற்காக நாம் பெருமை படவேண்டும் என்றும், இது தமிழர்களின் வசந்த காலம் என்றும், போராட்டம் ஒழுக்கத்தோடு நடந்ததாகவும் 
M. தமிமுன் அன்சாரி MLA, மாணவர் போராட்டத்தை சிலாகித்து வாழ்த்தி பேசினார்.

அப்போது அனைத்து கட்சி உறுப்பினர்களும் அதை வரவேற்று ஆராவரமாக மேஜையை தட்டி வரவேற்றனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.