"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
9/1/17

அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…

போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப  வறோம் – வயசு22…

தம்பி படிக்கிறான்,அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும் – வயசு24…

அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும்,அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு,தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம் – வயசு26…

தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்கு போகனும் அதனால இன்னும் ஒரு 2 வருஷம் – வயசு28…

அப்பா அம்மா பொண்ணு பார்க்கறாங்க கல்யாணம் பண்ணனும் அதுக்கு பணம் சேர்க்கனும் அதுக்கு ஒரு 1 வருடம் – வயசு30…

கல்யாணத்துக்கு வாங்கின கடன் எல்லாத்தையும் முடிச்சி ஊரு போகனும் அதுக்கு ஒரு 2 வருஷம் – வயசு32…

பிள்ளைய ஸ்கூல் சேர்க்கனும்,அதுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கனும் அதுக்கு 2 வருஷம் – வயசு34…

ஒரு வீட்ட கட்டி முடிச்சிடனும் இத்தனை வருஷம் இருந்து ஒன்னுமே சம்பாதிக்கல அதுக்கு ஒரு 6 வருடம் – வயசு40…

புள்ளங்க படிக்குது இப்போ ஊருக்கு போக முடியாது பணம் வேணும் அதுக்கு இன்னும் 10 வருஷம் இருந்தே ஆகனும் – வயசு50…

புள்ளங்க படிப்ப முடிக்க இன்னும் 2 வருஷம் இருக்கு அதனால இன்னும் 3 வருஷம் – வயசு53…

புள்ளைகளுக்கு ஒரு வேலை கிடைக்கனும்,பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் அதனால இன்னும் 4 வருஷம் – வயசு57…

கல்யாணம் பண்ணி கொடுத்ததும் மாப்பிள்ளைகளுக்கு ஒரு தொழில் அல்லது ஏதாவது உதவிகள் செய்து கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது அதனால ஒரு 4 வருடம் – வயசு61…
இது தான் வாழ்க்கையா?
சற்று சிந்தியுங்கள் ?

1 comments:

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.