"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/1/17

முஸ்லிம் மக்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு அளித்து வரும் மானியம் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது, ஹஜ் யாத்திரைக்கு அளிக்கப்படும் மானியத்தை படிப்டியாக குறைத்து 10 ஆண்டுகளுக்குள் நிறுத்தி விடும்படி 2012-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன், உயர்மட்டக் குழு அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் ஹஜ் பயணத்திற்கான மானியத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் முடிவாகும் என்றார்.

இதனிடையே ஹஜ் பயண மானியத்தை படிப்படியாக குறைக்க உயர்மட்டக் குழு அறிக்கயைில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அகில இந்திய மஜ்லிஸ்-இ முஸ்லிமின் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அசாதுடின் ஓவைசி ஆதரவு தெரிவித்துள்ளார். ஹஜ் புனித யாத்திரைக்கு அளிக்கப்படும் மானியம் 450 கோடி ரூபாயில் பெரும்பாலும் விமான போக்குவரத்து நிறுவனங்களே பயனடைகின்றன.

எனவே அத்தொகையை பெண் கல்விக்கு பயன்படுத்தலாம் என அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். மேலும் ஹஜ் யாத்திரைக்கு அரசின் மானியம் தேவையில்லை என்பதே இஸ்லாமிய மக்களின் விருப்பமாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.