"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/1/17

பிறப்பு என்பது இருந்தால், இறப்பு என்பதும் இருக்கும். இது தான் இயற்கையின் நீதி! ஆனால் அந்த இறப்பானது இயற்கையாக மனிதனை தேடி வர வேண்டும், நாமாக அதை தேடி போகக்கூடாது.

தென் கொரிய நாட்டில் பணப்பிரச்சனை, மன அழுத்தம், வேலை பளு போன்ற பல்வேறு காரணங்களுக்காக நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 40 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதை தடுக்க அந்நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் Kim Ki-Ho போலியான மரண சடங்கு (Fake Funeral) என்னும் ஒரு
விடயத்தை கண்டுபிடித்துள்ளார்.
அதன்ப்படி இதில் பங்கேற்பவர்கள், இறுதி சடங்கு நடக்கும் இடத்தில் மரத்தால் ஆன சவப்பெட்டியின் உள்ளே 30 நிமிடங்கள் படுத்து கொள்ள வேண்டும்.

மேலும், இதில் பங்கேற்பவர்கள் கல்லறை மீது தங்கள் புகைப்படத்துடன் எழுத ஏதாவது வாசகத்தை எழுதி தர வேண்டும். தங்கள் யார் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்களே அவர்களுக்கு கூற எதாவது உருக்கமாக விடயத்தையும் எழுத வேண்டும். இப்படி செய்வதால் மரணம் எவ்வளவு
கொடுமையானது, அதை நோக்கி நாம் செல்லவே கூடாது மற்றும் வாழ்க்கை வாழ்வதற்கே, சாவதற்க்கல்ல போன்ற
எண்ணங்கள் இதை செய்பவர்கள் மனதில் உருவாகும் என இந்த நிகழ்வை நடத்தும் ஏற்ப்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.