"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/1/17

பிறப்பிலேயே ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகளை பிரிப்பதற்கான சத்திரசிகிச்சைகள் சவூதி மன்னரின் உதவியின் கீழ் நடைபெறவுள்ளன.

எகிப்தை சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகள்களான மென்னா மற்றும் மே என்போர் பிறப்பிலேயே ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாவர்.

இவர்களது தலைப்பகுதி ஒன்றாக ஒட்டிய நிலையில் உள்ளது. அதைப் பிரிப்பதற்காக அதிகளவான பணம் தேவைப்படுகின்றது.

குறித்த சிறுமிகள் பற்றி கேள்வியுற்ற சவூதி மன்னர் சல்மான் அல் சவூட், உடனடியாக அவர்களை சவூதி தலைநகர் ரியாத்திலுள்ள மன்னர் அப்துல் அஸிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உத்தரவிட்டார்.

மேலும் குறித்த சிறுமிகளின் சிகிச்சைக்கு தேவையான செலவீனங்கள் அனைத்தையும் சவூதி மன்னரே ஏற்பதாக மன்னரின் அறக்கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

குறித்த சிறுமிகளை குணப்படுத்துவதற்கு பணம் இல்லாது தவித்து வந்த நிலையில் சவூதி மன்னர் உதவியுள்ளமை தனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி தருவதாக சிறுமிகளின் தந்தை மன்னருக்கு தனது நன்றிகளை பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.