"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/1/17

விருதுநகரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர் கூட்டம் இன்று நடந்தது. அக்கட்சியின் தலைவர் சரத்குமாருக்கு மலர் கிரீடம் அணிவித்து, வீரவாள் ஒன்றைக் கொடுத்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து நிர்வாகிகளோ, தொண்டர்களோ பெரிதாக கேள்வி எதுவும் எழுப்பவில்லை.

விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், “வெளிநாட்டு குளிர்பான தொழிற்சாலைகள் தமிழகத்தில் இருப்பது நல்லதல்ல. தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக போர் மூளும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாநில அரசு சிறந்த வகையில் கையாண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் பொறுமையாக சிறப்பாக செயல்படுகிறார். ஜல்லிக்கட்டு வரக்கூடாது என்று எந்த அரசியல் கட்சியும் சொல்லவில்லை. மாணவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

சாஃப்ட்வேர் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கிராமப்புறங்களில் உருவாக வேண்டும். அப்படி நடந்தால், கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்கள் இது போன்ற நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே, தங்களின் விவசாய நிலங்களையும் பார்த்துக்கொள்ள முடியும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என்று சொன்ன முதல் இயக்கம் சமத்துவ மக்கள் கட்சிதான். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், நான் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. ஏனென்று கேட்டால், என்னை விட, என்னால் ஒரு முதலமைச்சரை உருவாக்க முடியும் என்று சொன்னால், இளைஞர்களை அரசியலுக்கு வாருங்கள்.. வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோமே, அவர்களில் இருந்து ஒருவர் முதலமைச்சரானால் பெருமைப்படுவோம்.” என்றார்.

முதலமைச்சர் பன்னீர்செல்வத்தைப் பாராட்டவும் செய்கிறார்; முதலமைச்சராகும் எண்ணம் தனக்கிருப்பதையும் வெளிப்படையாகச் சொல்கிறார்; இளைஞர் ஒருவர் முதலமைச்சரானால் வரவேற்பேன் என்றும் கூறுகிறார். மொத்தத்தில், பரந்த சிந்தனை உள்ளவராக இருக்கிறார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.