"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
4/1/17

கர்ப்பமாக இருக்கும் போது, பெண்கள் உணவு விஷயத்தில் அதிக கவனமாக இருப்பது அவசியம் ஆகும். மற்ற சமயங்களை போல் இல்லாமல் கர்ப்பமாக இருக்கும் போது அதிக ஆரோக்கியமான, அதே சமயம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

அதுவும் இருவருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதால் உணவு விஷயத்தில் எதை சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிட கூடாது என்பதில் தெளிவாக இருப்பது அவசியம் ஆகும். இங்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடவே கூடாத சில உணவு வகைகள் எவை என்பதை பற்றி பார்ப்போம்..

உங்களுடைய உணவிலிருந்து காபியை முழுமையாக நீக்கி விடுவது நல்லது. நீங்கள் தினமும் காப்ஃபைன் கலந்த பானத்தை குடிக்காமல் இருக்க முடியவில்லை எனில், ஒரு நாளைக்கு 2 கோப்பை என்ற அளவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவது நல்லது. எனினும், ‘கர்ப்ப காலத்தில், அதுவும் முதல் 3 மாதங்களில் அளவுக்கு அதிகமாக காப்ஃபைன் உடலில் சேர்ந்தால், கருச்சிதைவோ அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோ ஏற்படக் கூடும்.

பாதியாக வெந்த முட்டை, கறி அல்லது மீன் ஆகியவற்றை கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உணவில் சேர்க்கக் கூடாது என்பதை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘பச்சையான அல்லது சமைக்காத கடல் உணவுகளை சாப்பிடுவதால் தாயின் உடலில் தொற்றுகள் ஏற்படும். பச்சை முட்டைகளும், கறியும் குழந்தை பெறப் போகும் பெண்ணுக்கு வாதம் தொடர்பான நோய்களை வர வைக்கும். இந்த உணவுகளின் வாயிலாக நோயினாலோ அல்லது தொற்றினாலோ பாதிக்கப்பட்டு, தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் பாதிக்குமாம்.

கர்ப்ப காலங்களில் பால் பொருட்களை சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். உடலுக்குத் தேவைப்படும் கால்சியத்தை பெற இது உதவினாலும், கிருமி நீக்கம் செய்யப்படாத பாலாடைக்கட்டி மற்றும் பாலை சாப்பிடுவதில் இருந்து சற்றே விலிக இருங்கள். ‘கிருமி நீக்கம் செய்யப்படாத பாலடைக்கட்டி மற்றும் பாலில் உள்ள கிருமிகள், தொப்புள்கொடி வழியாக குழந்தையை அடைந்து, கருச்சிதைவு ஏற்படக் காரணமாகி விடுகின்றது.

தெருக்களில் கிடைக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், அந்த பொருட்களை தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் சுத்தத்தை கவனிக்க வேண்டும். ‘தெருக்களில் உணவுப் பொருட்களை வாங்கினால் தொற்றுகள் வரும். சாதாரண நாட்களை விட, கர்ப்ப காலங்களில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், மற்ற எல்லோரையும் விட, அவளுக்கு அதிகமான நோய்த்தொற்றுகள் எற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆரோக்கியமான மற்றும் மூலிகை குணமுள்ள கிரீன் டீயை கர்ப்ப காலங்களில் குடிப்பதை தவிர்க்கவும். கிரீன் டீ சாப்பிடுவதால் நமது உடலின் இயக்கம் அதிகரிக்கிறது, எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்குள்ளும் இந்த மாற்றங்கள் அதிகளவில் நடக்கும். மேலும், கிரீன் டீயிலும் சிறிதளவு காப்ஃபைன் உள்ளதால், அளவுக்கு அதிகமாக கிரீன் டீயை குடிப்பது, சாதாரண காபி அல்லது டீயின் அளவிற்கு கேடு விளைவிக்கும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.