"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/1/17

இந்தியாவின் தனியார் விமான சேவை நிறுவனமான இன்டிகோ வடகிழக்கு மாநில (Northeastern States) மக்களுக்காக டெல்லி போலீஸூடன் இணைந்து புதிய இலவச சேவை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி டெல்லியில் உயிரிழக்கும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஏழை மக்களின் பிரேதங்களை இலவசமாக ஏற்றிச்செல்லவுள்ளது.

டெல்லி போலீஸின் சான்றுடன் வரும் ஏழை எளிய வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் சொந்தங்களின் உடல்களை இன்டிகோ விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திலிருந்து அகர்த்தலா (திரிபுரா), குவாஹத்தி, திப்ரூகார்க் (அஸ்ஸாம்), ஜப்வா (நாகலாந்து) மற்றும் இம்பால் (மணிப்பூர்) ஆகிய விமான நிலையங்களுக்கு இலவசமாக அனுப்பலாம்.

டெல்லியில் மட்டும் சுமார் 12 லட்சம் வடகிழக்கு மாநில மக்கள் மால்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் போன்றவற்றில் அடிமட்ட தொழிலாளர்களாகவும், செக்யூரிட்டிகளாகவும் (Security Guards) பணியாற்றி வருகின்றனர். இன்டிகோ விமான நிறுவனமும் டெல்லி போலீஸூம் செய்துள்ள இந்த மனிதநேய பணியை மனமுவந்து வரவேற்போம்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.