vkrnajur vkrnajur Author
Title: உயிரே போனாலும் அலெப்போவை விட்டு வரமாட்டேன் - டாக்டர் பரிதா நெகிழ்ச்சி பேட்டி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கடந்த ஐந்து ஆண்டுகளாக சிரியாவில் அதிபர் அல் ஆசாதுக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் போர்நடத்தி வருகிறார்கள். சிரிய ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி...
கடந்த ஐந்து ஆண்டுகளாக சிரியாவில் அதிபர் அல் ஆசாதுக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் போர்நடத்தி வருகிறார்கள். சிரிய ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்து வரும் போரில் அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களிடம் இருந்து நகரை மீட்க சிரிய ராணுவம் அலெப்போ மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மீது குறிவைத்து தாக்கிவருவதில் அவை அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. தற்போது அங்கு இருகும் ஒரே ஒரு மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் மட்டும் இருக்கிறார்.

இந்நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, கிளர்ச்சியாளர்கள் வெளியேற உள்ளதாக சிரிய ராணுவம் சமீபத்தில் அறிவித்தது. அழியும் நிலைக்கு வந்துவிட்ட அலெப்போ நகரத்தில் இருந்து ஏற்கெனவே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். ஆனால் எப்போதும் துப்பாக்கி, குண்டுகள் சத்தத்தில் அலறிக்கொண்டிருக்கும் இந்த நகரத்தைவிட்டு, ஒரு பெண் மட்டும் வெளியேற மறுக்கிறார். அவர், அலெப்போ நகரில் மிஞ்சியிருக்கும் ஒரே மகப்பேறு மருத்துவரான ஃபரிதா.



அலெப்போ நகரத்தில், ஒரே ஒரு மருத்துவமனைதான் மிஞ்சியிருக்கிறது. அங்கு தினம் தினம் தன் உயிரைப் பணையம்வைத்துச் சென்றுவருகிறார் பெண் மருத்துவர் ஃபரிதா. அங்கே வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் செய்துவரும் ஃபரிதாவுக்கு மருத்துவ உதவிக்கு ஆள்கூட இல்லாத பற்றாக்குறை. தண்ணீர் முதல் மருந்து வரை எந்த வசதியும் போதுமான அளவுக்கு இல்லை. இருந்தாலும் தன் மனித ஆற்றலை மட்டும் நம்பி, ரத்தச் சகதிக்கு நடுவிலும் பல குழந்தைகளை இந்த பூமிக்கு வரவேற்றபடி இருக்கிறார் ஃபரிதா.

சென்ற ஆண்டு சிரிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியபோது, ஃபரிதாவின் வீடும் அதில் சேதமடைந்துவிட்டது. அக்கம், பக்கத்தில் யாரும் இல்லாத அப்பார்ட்மென்டில் தன் மகளுடன் தங்கியிருக்கிறார் ஃபரிதா. நகர மக்கள், 'நீங்களும் வந்துவிடுங்கள்' என்று எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்துவிட்டார் ஃபரிதா. 'இந்த நகரத்தை விட்டுச்செல்ல எனக்கு விருப்பம் இல்லை. என் மருத்துவக் கடமைதான் எனக்கு முக்கியம் எஞ்சிய மக்களுக்காவது மருத்துவ உதவி செய்யவேண்டும்' என்று, உறுதியுடன் இருக்கிறார் ஃபரிதா.

 கிழக்கு அலெப்போவில் இருக்கும் மருத்துவமனைக்கு, தினமும் தன் எட்டு வயது மகளை அழைத்துக்கொண்டு வருகிறார் ஃபரிதா. தன் அம்மா சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது அந்தச் சிறுமி அங்கிருக்கும் கோழி, நாய் மற்றும் முயல்களிடம் விளையாடிக் கொண்டிருக்கிறாள். தினமும் 10 முதல் 15 தாய்மார்களுக்கு ஃபரிதா பிரசவம் பார்த்தபடி இருக்க, இன்னொரு பக்கம் போர்த் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இன்றி பரிதவித்து நிற்கும் மக்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறார்.

''ராணுவம் மருத்துவமனைகளின் மீது குறிவது தாக்குதல் நடத்திவருகிறார்கள். இந்த மருத்துவமனை மீதும் ஒருநாள் வெடிகுண்டு வீசப்படும் என்ற அச்சத்துடன்தான் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்கிறேன். என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை நான் அறிவேன்" என்று மெயில்ஆன்லைனில் (MailOnline) மீடியாவிடம் தெரிவித்திருக்கிறார் ஃபரிதா.

அலெப்போவில் பொதுமக்களை வெளியேற்றும் இறுதிகட்ட பணிகள் துவங்கியுள்ளன. இதுவரை லட்சனக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தன் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று தெரிந்தும், தாய், சேய் என தினமும் பல உயிர்களைக் காப்பாற்றி வரும் இந்த மருத்துவப் பெண்ணுக்கு, நெகிழ்வான வாழ்த்துக்கள்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top