"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
21/1/17

தமிழர் ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் எச்.ராஜா, தமிழ் இளைஞர்களை இழிவுபடுத்தும் சு.சாமி, ராதாராஜன் ஆகியோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

“மாட்டை அறுத்து சாப்பிடும் முஸ்லிம்களும், தலித்துகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது” என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

பண்பாட்டு உரிமை மீட்கப் போராடி வரும் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களை ‘பொறுக்கிகள்’ என்று பாஜக எம்.பி. சு.சாமி குறிப்பிட்டு வருகிறார்.

“இலவச உடலுறவு’ என்று அறிவித்தாலும் இவ்வளவு இளைஞர்கள் கூடுவார்கள்” என்று எண்ணிப் பார்க்க முடியாத ஆபாச தொனியில் பீட்டா ஆதரவாளரும், ஆர்எஸ்எஸ் பிரமுகருமான ராதாராஜன் பேசியுள்ளார்.

தமிழினத்தின் உரிமைக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் மிகுந்த கட்டுப்பாட்டோடும், கண்ணியத்தோடும், கடமை உணர்வோடும் அகிம்சை வழியில் போராடிவரும் வேளையில், அவர்களது மன உறுதியைக் குலைக்கும் வகையிலும், ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலும், வன்முறைக்குத் தூண்டும் வகையிலும், ஒருவகையான சாதீய ஆணவத்தோடு மேற்கண்ட நபர்கள் தமிழக மக்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இவர்கள் மீது தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

(ஒ-ம்ம்) எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.