"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/1/17

எதிர்வரும் ஹஜ் கடமையை மேற்கொள்ளவருமாறும் அதற்கான ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் முறைப்படியான அழைப்பை சுமார் 80 நாடுகளுக்கு சவுதி அனுப்பியுள்ளது, அதில் ஈரானும் ஒன்று.

கடந்த வருடம் ஒப்பந்ததிற்கான பேச்சுவார்த்தையின் போது ஈரான், ஹஜ் கடமையின் போது யாத்திரையுடன் சம்பந்தமில்லாத அரசியல் நோக்கமுள்ள கூட்டங்கள் கூடவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் அனுமதிக்கக்கோரியதை முற்றாக சவுதி நிராகரித்ததை அடுத்து சுமார் 60,000 ஈரானிய பயணிகளை ஹஜ் செய்யவிடாமல் ஈரான் தடுத்துக் கொண்டது. எனினும், மேலைநாடுகளில் வசிக்கும் சுமார் 700 ஈரானியர்கள் சுமுகமாக ஹஜ் செய்து திரும்பினர்.

இந்த வருடம் அழைப்பு வந்துள்ளதை உறுதிசெய்துள்ள ஈரான், ஹஜ்ஜில் பங்கெடுப்பது குறித்து பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.