"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/1/17

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் தேசியக் கொடியை காலடி மேட்டில் வைத்து, அமேசான் நிறுவனம் இணையதளம் மூலம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதனை அதனை நிறுத்தியது.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை செருப்பில் பதித்து, விற்பனைக்கு இணைதளம் மூலம் வெளியிட்டுள்ளது. இதை பார்த்த இந்திய மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இணையதளம் மூலம் பல்வேறு பொருட்களை அமேசான் நிறுவனம் மூலம் பல நிறுவனங்கள் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு இணையதளத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள சம்பவம் தற்பேது வெளியாகியுள்ளது.

இதை பார்த்த இந்தியர்கள், கடும் எரிச்சலும், ஆத்திரமும் அடைந்துள்ளனர்.
இதனை கண்டித்து, உலகெங்கும் உள்ள இந்தியர்கள் அமேசானுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் மூலம் இதுபற்றி பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியேருக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால், சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தை பற்றி, இந்திய அரசு இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கடந்த வாரம் இந்திய தேசியக்கொடி பாதிக்கப்பட்ட காலடி மேட்டுகள் அமேசான் நிறுவனம் மூலம் கனடா பிரிவு இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.