"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/1/17

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் நேற்று தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட மாணவர்கள் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு முழுவதும் இந்த போராட்டம் நீடித்தது.

இதனையடுத்து அவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக அடித்து கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் சென்னை மெரினாவில் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தை எந்தவித அரசியல் கட்சியின் சார்பு இல்லாமல் பொதுமக்களாக வெகுண்டெழுந்து நடத்துகின்றனர். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் அலங்காநல்லூர் சென்று தங்களது ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அலங்கா நல்லூர் போரட்டம் குறித்து சில சேனல்களை தவிர மற்ற தமிழக செய்தி சேனல்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில்  அலங்கா நல்லூரில் போராட்டத்தை படம்பிடிக்க சென்ற தந்தி தொலைக்காட்சி வாகனத்தை மறித்த பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் கூறி அங்கிருந்து வெளியேற்றின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.