"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
9/1/17

சென்னை: தமிழகம் சார்ந்த பிரச்சனைகளில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. தற்போது பொங்கல் திருநாளுக்கு கட்டாய பொதுவிடுமுறை என்பதை ரத்து செய்துவிட்டு விருப்ப விடுமுறையாக எடுத்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
தமிழகம் என்றாலே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதையே வழக்கமாக வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோக காரணமாக இருக்கிறது.
மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணாமாலே இழுத்தடித்து வருகிறது. ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை செவிகொடுத்து கேட்க தயாராகவும் இல்லை.
இப்போது தமிழர் திருநாளாம் பொங்கல் விடுமுறையில் கை வைத்திருக்கிறது மத்திய அரசு. ஜனவரி 14-ந் தேதி பொங்கல் திருநாள் அன்று கட்டாய பொதுவிடுமுறை என்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போது பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் திருநாளன்று விருப்ப விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியை எப்போதுமே வட இந்தியா கட்சியாகத்தான் தமிழகம் பார்க்கிறது. தற்போது பாஜக, தமிழர் திருநாளாம் பொங்கலுக்கான பொதுவிடுமுறையை ரத்து செய்திருப்பதன் மூலம் ஆம் நாங்க வட இந்தியா கட்சிதான் என நிரூபித்தேவிட்டது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.