"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/1/17

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் அமைந்துள்ள செயின்ட் மேரீஸ் கேதட்ரல் எனும் சர்ச்சில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கிளாஸ்கோ நகர கம்யூனிட்டியை சேர்ந்த முஸ்லீம்கள் சிலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லீம்களிடம் சர்ச் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து அங்கு அல்குர்ஆனின் 19வது அத்தியாயமான சூரா மர்யத்தின் சில வசனங்கள் ஓதப்பட்டு பொருள் கூறப்பட்டது. இந்த அத்தியாயம் உலக முஃமீன்களின் தாய் என உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள மர்யம் (அலை) மற்றும் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு மற்றும் இறைவனுக்கு மகன் இல்லை என மறுத்தல் பற்றியதாகும்.

கிருஸ்துவம் மற்றும் இஸ்லாமிய சமூக மக்களின் புரிந்துணர்வு நடவடிக்கையாக சர்ச்சிற்குள் குர்ஆன் ஓத அனுமதிக்கப்பட்டதற்காக இந்நிகழ்ச்சியின் நிறைவுக்குப் பின், சர்ச் பொறுப்பாளர்கள் மற்றும் குருமார்களை கடுமையாக வசைபாடி சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர் சிலர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சர்ச் நிர்வாகம் சார்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.