"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
5/1/17

நேற்று (ஜனவரி 4) துபையின் ஆட்சியாளராக பதவியேற்ற 10வது ஆண்டின் துவக்கத்தை சிறப்பிக்கும் வகையில் 'உணவு வங்கி' (Food Bank) திட்டத்தை துவக்கி வைத்தார் ஷேக் முஹமது பின் ராஷித் அவர்கள், இதன் மூலம் வளைகுடா பகுதியில் உணவை வீணடிக்காத பிராந்தியமாக துபை உருவாக்கவுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

துபை அரசின் துணையுடன் செயல்படும் தர்ம அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்பட இருக்கும் இந்த உணவு வங்கி நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பண்ணைகள் என உணவுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தளங்களிலிருந்தும் மீதமாகும் கெடாத உணவுகள் திரட்டப்பட்டு, சுகாதாரமான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு தன்னார்வத் தொண்டர்கள், பங்களிப்பாளர்கள் உதவியுடன் அமீரகத்திற்குள்ளும், பிற நாடுகளிலும் தேவையுடையோருக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் செயல்படும் பல தொண்டு நிறுவனங்களுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளப்படும்.

மேலும் தேதி காலாவதியான (Date Expired), கெட்டுப்போன உணவுகளை (Inedible) கூட வீணடிக்காமல் மறுசுழற்சி (Recycle) செய்து உரம், ரசாயனம், மருத்துவ ஆய்வு போன்ற பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் துபை மாநகரம் பூஜ்ய உணவு விரய மாநகராக (Zero Food Wastage City) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 13 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள உணவுகள் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துபை மாநகராட்சி உணவு வங்கியின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.