"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/1/17

கல்வியின் சிறப்புகளைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

இறைவா கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன்:20:114)

அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? என, (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன்: 39:9)

உங்களில் இறை நம்பிக்கையாளர்களுக்கும், அறிவுடையோருக்கும் பல பதவிகளை அல்லாஹ் வழங்குவான். (அல்குர்ஆன்: 58:11)

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. (அல்குர்ஆன்: 11:85)

முஆவியா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

”அல்லாஹ் ஒருவருக்கு நல்லதை நாடிவிட்டால், மார்க்க விஷயத்தில் அவரை அறிஞராக்குவான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1376 )

இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

”இருவர் விஷயத்திலே தவிர பொறாமை கூடாது. 1) அல்லாஹ் செல்வத்தை வழங்கி, அதை உரிய வழியில் செலவு செய்பவர். 2) அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதன் மூலம் தீர்ப்பளித்து, பிறருக்கு கற்றுத் தருபவர்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1377)

அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

”நேர்வழி மற்றும் கல்வி ஞானம் ஆகியவற்றுடன் என்னை அல்லாஹ் அனுப்பி வைத்ததற்கு உதாரணம் : பூமியை வந்தடைந்த மழையின் உதாரணம் போலாகும். அதில் ஒரு பகுதி தண்ணீரை ஏற்றுக் கொண்டு, செடி-கொடிகளை அதிக அளவில் விளையச் செய்கிறது. தண்ணீரை தேக்கி வைத்து, அதன்மூலம் மக்களுக்கு பயனளித்த கெட்டியான பூமியாக உள்ளது. மக்களும் அதிலிருந்து குடித்தார்கள். (கால் நடைகளுக்கு) குடிக்கக் கொடுத்தார்கள். விவசாயம் செய்தார்கள்.

அந்த பூமியின் மற்றொரு பகுதி, கட்டாந்தரையாகும். அது தண்ணீரையும் தேக்கி வைக்காது. செடிகளையும் முளைக்கச் செய்யாது. இதில் முதல் உதாரணம், அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் என்னை அனுப்பி வைத்த மார்க்கம் மூலம் பயன் அளித்து, (அதாவது) தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுத்தவனுக்குரிய உதாரணமாகும். (கட்டாந்தரை உதாரணம்) மார்க்கத்தின் பக்கம் தன் தலையைக் கூட திருப்பாமல், அல்லாஹ் என்னை எதன் மூலம் அனுப்பினானோ அந்த வழியை ஒப்புக் கொள்ளாமல் இருப்பவனுக்கும் உதாரணமாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1378)

ஸஹ்ல் இப்னு ஸஹ்து (ரலி) அறிவிக்கின்றார்கள்:

”நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களிடம், ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் உம் மூலம் ஒருவனுக்கு நேர்வழி காட்டுவது, சிவப்பு நிற ஒட்டகைகள் உமக்கு இருப்பதை விட சிறந்ததாகும்” என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1379)

”ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபிகள் நாயகம் (ஸல்)”. (நூல்: புகாரி, முஸ்லிம்)

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.