காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: எயிட்ஸ் பாதிக்கப்பட்ட நடிகை த்ரிஷா மரணம்: போஸ்டரால் பரபரப்பு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
நடிகை த்ரிஷா பீட்டா அமைப்பின் தூதுவராக இருப்பதால் அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என கருதி நடிகை த்ரிஷாவுக்கு எதிராக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள...

நடிகை த்ரிஷா பீட்டா அமைப்பின் தூதுவராக இருப்பதால் அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என கருதி நடிகை த்ரிஷாவுக்கு எதிராக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
நடிகை த்ரிஷா கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்தது. இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நடிகை த்ரிஷாவின் கேரவனை முற்றுகையிட்டு படப்பிடிப்பையே நிறுத்தினர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் த்ரிஷாவுக்கு
எதிராக மீம்ஸ்கள் போட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஒரு படி மேலே சென்று நடிகை த்ரிஷா எயிட்ஸ் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என போஸ்டர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இதில் த்ரிஷாவின் குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top