vkrnajur vkrnajur Author
Title: ஏ.ஆர்.ரஹ்மானின் நிலை கண்டு அழுதே விட்டார்- சோமாலியா பிரதமர் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருது வாங்கிய தமிழன். இதோ மீண்டும் 2016க்கான ஆஸ்கர் விருதும் ஓ.கே. ஆகிவிட்டத...
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருது வாங்கிய தமிழன். இதோ மீண்டும் 2016க்கான ஆஸ்கர் விருதும் ஓ.கே. ஆகிவிட்டது.
தமிழ் படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்துக் கொண்ட ரஹ்மான் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவரது சம்பளம் பல மில்லியன் கோடிகள்.

எங்கு எந்த நாட்டில் இருந்தாலும், ஐந்து வேளை தொழுகையை கட்டாயமாக நிறைவேற்றுவார். அதே போல எந்த நாட்டில் இருந்தாலும் ரம்ஜான் நோன்பு கட்டாயமாக இருந்து விடுவார்.

தான தர்மம் செய்வதிலும் தயாள குணம் கொண்டவர் ரஹ்மான். ஒரு இசை முயற்சிக்காக சோமாலியா சென்றார் ரஹ்மான். அங்கு 3000 ஆண்டு பழமையான இசைக் கருவிகள் புழக்கத்தில் இருந்து வருகிறது.
மூன்று வருடங்கள் பழகினால் மட்டுமே அந்த கருவியை வாசிக்க முடியும். ரஹ்மான் அந்த கருவியை பார்த்து ஒரு டஜன் வாங்கிக் கொண்டார். விலைபேசி வாங்கியும் கொண்டார்.

ஆனால், பரிதாபம் 3000 வருட பாரம்பரிய இசைக்கருவி சில நூறுகளே…! பார்த்தார் ரஹ்மான். இந்த இசைக்கருவிகளுக்கு சில நூறுகள் விலை என்பது அவமானம். இது விலைமதிப்பில்லாத கருவி.

வறுமை, பசி, பட்டினியால் வாடும் சோமாலியா குழந்தைகள் நலனுக்காக பல கோடிகளை நன்கொடையாக கொடுத்து விட்டார். ஆடிப்போனது சோமாலியா அரசு. அவர்களால் நம்பவே முடியவில்லை.
சோமாலியா பிரதமர் அழுதே விட்டார். சட்டென்று ரஹ்மான் கால்களில் விழப்போனார். பதறிப் போய் தடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஒரே ஒரு வார்த்தை சொன்னார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top