Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் நடைப்பெற்ற வாலிபால் (கைப்பந்து) போட்டி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தாருஸ்ஸலாம் வாலிபால் கிளப் சார்பாக மில்லத்நகரில் நேற்று வாலிபால் (கைப்பந்து) போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டிக்கு முதல் பரிசாக ரூ 3,0...

தாருஸ்ஸலாம் வாலிபால் கிளப் சார்பாக மில்லத்நகரில் நேற்று வாலிபால் (கைப்பந்து) போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டிக்கு முதல் பரிசாக ரூ 3,003ம் இரண்டாம் பரிசாக ரூ 2,002ம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ 1,001ம் அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றன.

இறுதி சுற்றுக்கு லப்பைக்குடிகாடு அணியும், வி.களத்தூர் தாருஸ்ஸலாம் A. அணியும் நேருக்கு நேர் மோதின இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இரு சமபலம் வாய்ந்த அணியில் வெல்லப்போவது யார்? என்ற கேள்வி அணியின் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கும் ஆவல் இருந்ததை காணமுடிந்தது.

இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைப்பெற நிலையில் இறுதியாக லப்பைக்குடிகாடு LBK அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. வி.களத்தூர் தாருஸ்ஸலாம் DVC - A அணி இரண்டாம் பரிசை வென்றது. மூன்றாம் பரிசை வி.களத்தூர் DVC - B அணி வென்றது. இந்த போட்டியில் கலந்துக் கொண்ட அணிகளுக்கும் வெற்றிபெற்ற அணிகளுக்கும் எமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 



About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top