"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/1/17

குவைத்தில் கடந்த வருடம்(2016) மட்டும் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட 29000 பேர் நாடுகடத்தபட்டனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 80 பேர் நாடுகடத்தபட்டுள்ளனர்.

இதில் 29 % இந்தியர்கள் சராசரியாக 7500-க்கும் மேற்பட்டவர்கள், 

இப்படி நாடுகடந்தப்படுவகளில் முக்கியமான ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம்.அதில் முதலிடத்தில் இந்தியர்கள் உள்ளனர். இரண்டாவது எகிப்து 22, பிலிப்பைஸ் 13%, எத்தோப்பியா 13%, இலங்கை 6 %, வங்காளதேச நபர்கள் 5 % 
 
என இந்த முக்கிய ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம்.நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்காக நாடுகடத்தல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளோரின் ஆவண வேலைகள் விரைந்து 1 வார காலத்தில் முடிக்கப்பட்டவுடன் விமான டிக்கெட்டுகள் முன்பதிவுகள் செய்யப்பட்ட 3 நாட்களில் வெளியேற்றப்படுவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு கடத்தபட்டவர்களில் 80%பேர் மேற்கூறிய ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் அதிகமும் சட்டத்தை மீறியவர்கள் சாலை விதிகளை மீறியவர்கள் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை பெற்றவர் ஆகியவர்கள் அடங்குவர்கள்.

மேலும் அதிகாரி கூறுகையில்
தெருச் சண்டைகளில் ஈடுபடுவோர், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் மற்றும் கடுமையான போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபடுவோர் யாரும் தப்பிக்க முடியாது எனவும் குவைத் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.