"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
4/1/17

எல்லாம் வல்ல அல்லாஹ் கடந்த 2016-ம் வருடம் நம்மை விட்டு பிரிந்தவர்களின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக ............. ஆமீன். 

கடந்த 2016 ஆம் வருடம் நம்முடன் வாழ்ந்த நமதூரைச் சார்ந்தவர்கள் இப்போது நம்மை விட்டு பிரிந்துவிட்டார்கள். சென்ற வருடத்தில் எங்களுக்கு தெரிந்து ஆண்கள் - 16 பேரும் பெண்கள் - 10 பேரும் மொத்தம் 26 பேர் நம்மைவிட்டு பிரிந்துள்ளார்கள். 

அவர்களைப் பற்றி முழு விபரங்களை அறிய ஊதா கலரில் உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.28.03.16 அன்று வி.களத்தூர் பழைய மணியார் வீடு (மர்ஹூம்) பக்கீர் முஹம்மது மகன் (வக்கீல்) அப்துல் ரசீது அவர்கள் காலை சென்னையில்  வபாத்தானார்.

05.04.16 அன்று வி.களத்தூர் (மர்ஹூம்) கசாய் ஜமால் கான் மகன் ரசூல் கான் அவர்கள் காலை 11 மணியளவில் வபாத்தானார்.

29.04.16 அன்று மில்லத்நகர் (மர்ஹூம்) டீக்கடை தீன் முஹம்மது அவர்களின் மகன் D.குலாம் மொய்தீன் அவர்கள் அதிகாலை 5.30 மணி மணியளவில் வபாத்தானார்.

06.05.16 அன்று மில்லத்நகர் (மர்ஹூம்) யாகூப் ஹஜ்ரத் அவர்களின் மகளும், கொரக்காவாடி ஷர்புதீன் அவர்களின் மனைவியுமாகிய ஹலிமாபீ அவர்கள் இரவு 9 மணியளவில் வபாத்தானார்.

19.05.16 அன்று வி.களத்தூர் (மர்ஹூம்) யாகூப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ரஹிமாபீ என்பவர் காலை 6 மணியளவில் வபாத்தானார்.


05.08.16 அன்று வி்.களத்தூர் (மர்ஹூம்) பதியான் வீட்டு முஹம்மது அலி அவர்களின் மகன் நூர் முஹம்மது என்பவர் நள்ளிரவு 12.30 மணியளவில் வபாத்தானார்.


05.09.16 அன்று வி்.களத்தூர் (மர்ஹூம்) அப்துல் முத்தலீப் அவர்களின் மகன் ஹாஜி S.M.A. அப்துல் குத்தூஸ் ( பூம்புகார் ஜவுளி துணி கடை ) அவர்கள் காலை 7.45 மணியளவில் வபாத்தானார்.


 
27.10.16 அன்று வி்.களத்தூர் மொனங்கனிவீட்டு ஷாஜஹான் (மணமகள் ஃபேன்ஸி ஸ்டோர்) அவர்களின் மனைவி S.சல்மாகனி என்பவர் அதிகாலை 2.00 மணியளவில் வபாத்தானார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.