Mohammed Farook Mohammed Farook Author
Title: டெல்லி மருத்துவக் கல்லூரிக்கு 2 மில்லியன் டாலர் மதிப்பிலான நவீன மருத்துவக் கருவி அமீரகம் அன்பளிப்பு !
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
டெல்லியில் இயங்கி வரும் பிரசித்திபெற்ற அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் (AMU) உறுப்புக் கல்லூரியான 'ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்...
டெல்லியில் இயங்கி வரும் பிரசித்திபெற்ற அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் (AMU) உறுப்புக் கல்லூரியான 'ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரிக்கு'(JNMC)  அமீரக ஜனாதிபதியின் 'கலீபா அறக்கட்டளை' (Khalifa Foundation) சுமார் 2 மில்லியன் டாலர் மதிப்புடைய  Elekta Synergy Digital Accelerator என்ற நவீன மருத்துவக் கருவியை அன்பளிப்பாக வழங்கியது.


அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அமீரக ராணுவப் படைகளின் துணைத் தளபதியுமான முஹமது பின் நஹ்யான் அவர்கள் இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாலும், இந்திய - அமீரகத்தின் நெருங்கிய உறவை சிறப்பிக்கும் விதத்திலும், அமீரக அரசு 2017 ஆம் ஆண்டை 'வழங்கி மகிழம் ஆண்டு' என பிரகடனப்படுத்தியுள்ளதை தொடர்ந்தும் இவ்வன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் 1975 ஆம் ஆண்டு அன்றைய அமீரக ஜனாதிபதியும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தையுமான ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடன் இணைந்து அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்திருந்தார்.

இந்த நவீன மருத்துவக் கருவியை ஜவஹர்லால் மருத்துவக் கல்லூரிக்கு பெற்றுத் தருவதில் அமீரகத்தில் செயல்படும் இந்தியருக்கு சொந்தமான VPS Healthcare என்ற நிறுவனம் பெரும் பங்காற்றியது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top