"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
22/1/17

ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவனைக் கொன்று தின்ற 16 வயதுச் சிறுவனை போலிஸார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் தீபு குமார் (9) என்ற சிறுவன் கடந்த திங்களன்று காணாமல் போனான். மறு நாள் செவ்வாய்க்கிழமையன்று அவனது தலையற்ற உடல் ஒரு வெட்டவெளியில் வீசப்பட்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கெமரா ஒன்றில் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் சிறுவனுடன் தீபு குமார் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதன் அடிப்படையில் குறித்த சிறுவனை போலிஸார் விசாரணை செய்தபோது அதிர்ச்சித் தகவல்கள் சில வெளியாகின.

சந்தேக நபர் அளித்த வாக்குமூலத்தில், திங்கட்கிழமை மதியம் சுமார் ஒன்றரை மணியளவில், பட்டம் விடும் நூலை தருவதாகக் கூறி தீபு குமாரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தீபுவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து குளியலறையில் வைத்து தலையை வெட்டியெடுத்தபின் உடலைக் கூறு போட்டதாகவும், தீபுவின் உடல் பாகங்களைக் கடித்துத் தின்றதாகவும், வழிந்த இரத்தத்தைக் குடித்ததாகவும் தெரிவித்துள்ளான்.

மேலும், தனது ஆசிரியர்கள் மேல் இருந்த வெறுப்பினால், தீபுவுன் இதயத்தை தான் கல்வி கற்றுவரும் பாடசாலையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்து அந்தப் பாடசாலை வளவுக்குள் வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளான்.

சந்தேக நபருக்கு ஏற்கனவே இறைச்சியைப் பச்சையாக உண்ணும் வழக்கம் இருந்திருக்கிறது. கோழி இறைச்சியை பச்சையாகவே சாப்பிடுவதையும், எதுவும் கிடைக்காதபோது தனது கையையே கடித்துச் சாப்பிட முயன்றதையும் வாக்குமூலத்தில் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.

இதையடுத்து குறித்த சந்தேக நபர் மீது பொலிஸார் நரமாமிசத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, அவனை மனவள ஆலோசகரிடம் பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்துள்ளனர்.
- See more at: http://www.anuradhapuranews.info/2017/01/16.html?m=1#sthash.rvMcNrTA.dpuf

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.