"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
21/1/17

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் ஆதரவுக் குரல் ஒலிக்கும் நிலையில் பீட்டா உள்ளிட்ட விலங்குகளின் நல ஆர்வலர்கள் நிலைமை படுமோசமாக உள்ளது. 'போனில் கெட்ட வார்த்தைகளால் திட்டுறாங்க சார்' என்று புலம்புகின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.

ஜல்லிக்கட்டு என்ற ஒற்றை வார்த்தை ஓட்டுமொத்த தமிழர்களை ஒருங்கிணைத்து இருக்கிறது. சென்னை மெரினாவில் தொடங்கி குமரி வரை இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள், முதியோர்கள், குழந்தைகள் என அனைவரும் உச்சரிக்கும் ஒரே சொல் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற முயற்சிக்காத மத்திய, மாநில அரசைக் கடுமையாக விமர்சிக்கும் போராட்டக்குழுவினர், பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல ஆர்வலர்களையும் விட்டு வைக்கவில்லை. 
இதுகுறித்து மதுரையிலிருக்கும் விலங்குகள் நல ஆர்வலர் ஒருவரிடம் பேசினோம். "உலகத்தில் எங்கும் விலங்குகள் துன்புறுத்தப்படக்கூடாது என்ற குறிக்கோளாடு விலங்குகள் நல அமைப்புகளில் உறுப்பினராக சேர்ந்தேன். ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய விவகாரத்தில் தற்போது போராட்டக்குழுவினர் எங்களை கடுமையாக விமர்சிக்கின்றனர். நேற்றிரவு 12 மணிக்கு என்னுடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பிரைவேட் நம்பர் என்று குறிப்பிட்ட அந்த எண்ணில் பேசியவரின் வார்த்தைகள் என்னை மிகவும் வேதனையடைச் செய்தது. குறிப்பாக கெட்ட வார்த்தைகளால் அவர், என்னையும், என் குடும்பத்தினரையும் திட்டினார்.  போராட்டக்களத்திலிருந்து அவர் பேசுவது நன்றாக தெரிந்தது" என்றார்

 அடுத்து பேசியவர் சென்னை துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் குடியிருப்பவர், "விலங்குகளைக் காப்பாற்ற பல வகைகளில் போராடி வருகிறோம். எங்களது வேலைகளுக்கு நடுவில் சாலையில் அடிப்பட்டுக் கிடக்கும் விலங்குகளுக்கு பலவகைகளில் உதவிகளை செய்து வந்தேன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எங்களை போராட்டக்குழுவினர் மிகவும் கேவலமாக விமர்சித்து வருகின்றனர். விலங்குகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு நடத்தினால் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனை இல்லை. நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டில் விலங்குகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகின்றன என்ற விவரத்தை வீடியோவாக பீட்டா சமர்பித்தது. அதைப்பார்த்த பிறகு ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்களும் தமிழகத்தில்தான் இருக்கிறோம். எங்களுக்கும் கலாசாரத்தின் மீதும், தமிழர் என்ற உணர்வும் இருக்கிறது" என்றார். 
தொடர்ந்து தெருநாய்களுக்கு உதவும் பெண் இன்ஜினீயர் ஒருவர் கூறுகையில், "சார், ஜல்லிக்கட்டு தடைக்கு விலங்குகள் நல அமைப்புகள்தான் காரணம் என்று சொல்வது முற்றிலும் தவறு. காளைகளைக் துன்புறுத்தப்படுவதைத்தடுக்கவே விலங்குகள் நல அமைப்புகள் நீதிமன்றத்தில் முறையிட்டன. தற்போது, ஜல்லிக்கட்டுத் தடைக்கு எங்களை குற்றம் சுமத்துவது எந்தவிதத்தில் நியாயம். போராட்டம் நடந்துவரும் இந்தக்காலக்கட்டத்தில் எங்களால் நிம்மதியாக வெளியே செல்ல முடியவில்லை. விலங்குகள் நல ஆர்வலர்கள் என்று தெரிந்தால் போராட்டக்குழுவில் சிலர் எங்களையும், எங்கள் குடும்பத்தினரையும் கேவலமாக பேசுகின்றனர். போனிலும் பல மிரட்டல்கள் வருகின்றன. இதனால் எங்கள் குடும்பத்தினர் போனைப் பயன்படுத்தி பல நாட்களாகி விட்டன. ஒருவித அச்சத்துடன் ரகசியமாக வாழ்கிறோம்" என்றார். 
சார், உங்கள் போன் என்பதால் எடுக்கிறேன் என்று பேசத் தொடங்கினார் ப்ளு கிராஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர். அவர் கூறுகையில், "ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த நாங்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வெளியில் செல்ல முடியவில்லை. கெட்ட வார்த்தைகளால் போனில் திட்டுறாங்க. எங்களுக்கே இந்த நிலைமை என்றால் பீட்டாவில் உள்ள நிலைமை பரிதாபமாக இருக்கிறது. இதனால்தான் மும்பையில் பீட்டா நிர்வாகியின் சி.இ.ஒ. பூர்வா, தனக்கு மிரட்டல்கள் வருவதாக வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். சென்னையில் உள்ள பீட்டா நிர்வாகிகள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் கூட தெரியவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அலங்காநல்லூரில் நடந்த விளையாட்டுப் போட்டிகளை வீடியோவாக எடுத்துக் கொடுத்த இன்ஜினீயர் ஒருவர் பீட்டாவில் இருக்கிறார். அவர், மிகவும் மனஉளைச்சலில் உள்ளார். குறிப்பாக சென்னையில் எங்கு அவர் இருக்கிறார் என்ற விவரம் கூட தெரியவில்லை. நாங்களும் விலங்குகளுக்காகத் போராடுகிறோம். தமிழர்களின் உணர்வுகளை எதிர்த்து போராடவில்லை"என்றார். 
பீட்டா நிர்வாகியின் மும்பை நிர்வாகியிடம் போனில் பேசினோம். "ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் நடந்து வரும் இந்த நேரத்தில் அவசர சட்டத்தை இயற்ற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சட்ட ரீதியாக அதை எதிர்கொள்ள சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். மேலும், இதுவரை பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தேவைப்பட்டால் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பை கேட்போம். ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கியதால் எங்கள் அமைப்பை அவதூறாக போராட்டக்குழுவினர் விமர்சித்து வருகின்றனர். இவற்றை எல்லாம் சட்டரீதியாக எதிர்கொள்வோம். ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்பட்டால் அதற்கு தடை வாங்க அனைத்து வகையில் முயற்சிப்போம்"என்றார். 
http://www.vikatan.com/news/tamilnadu/78331-what-is-petas-next-move---effect-of-jallikattu-protest.art

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.