.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
24/1/17

போலீசாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பெரம்பலூரில் 6 நாட்களாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் கலைந்து செல்ல மறுத்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

6-வது நாளாக போராட்டம்
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டு அவசர சட்டம் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது. 

எனினும் போராட்டக்காரர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி போராட்டத்தை கைவிட மறுத்தனர். அந்த வகையில் பெரம்பலூர் பாலக் கரை ரவுண்டானா அருகே மாணவ-மாணவிகள் இரவு, பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர் களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நேற்று 6-வது நாளாக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. தார்ப்பாயை விரித்து அமர்ந்திருந்த சுமார் 50 மாணவர்கள் பீட்டாவை தடை செய்ய கோரியும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை
நேற்று காலை 7.30 மணியளவில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திக், மோகன், தம்பிராஜன் உள்பட போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விட்டது, எனவே வெற்றியோடு போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள் என போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, 6 நாட்களாக நடந்த தொடர் போராட்டத்தை மாணவர்கள் முடித்துக்கொண்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

போலீஸ் குவிப்பு
பின்னர் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் கிடந்த தார்ப்பாய், நாற்காலிகள், பதாகைகள் உள்ளிட்டவற்றை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பி பொதுமக்கள் அவ்வழியாக போக்குவரத்தை மேற்கொண்டனர்.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

11 பேர் கைது
பெரம்பலூர் புது பஸ்நிலையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் ஆர்வலர்களையும் போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது அதற்கு மறுத்த தமிழ் ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் தேவை என கூறிக்கொண்டே அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தி கைது செய்தனர். மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.




Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.